சமையல் எண்ணெய் மீதான வரிவிதிப்பு குறைந்ததன் முழுப்பயனும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக சமையல் எண்ணை மீதான விலை உயர்வு அதிகரித்து வருகின்றது. பண்டிகை காலத்தை ஒட்டி சமையல் எண்ணெய் விலை குறைப்பதற்காக கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இரண்டாவது முறையாக இம்மாதம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. […]
