உறவினர் வீட்டில் ஆவணங்களை திருடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள கும்பிநாயகன்பட்டி கிராமத்தில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது சொந்த வீட்டின் சாவியை அதே பகுதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன்- காயத்ரி தம்பதியினரிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயச்சந்திரனும் அவரது மனைவி காயத்ரியும் இணைந்து போஸ் வீட்டில் வைத்து இருந்த சொத்து பத்திரங்களை திருடியுள்ளனர். இது […]
