சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கணவன்-மனைவி தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டையில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற சித்தப்பாவும், ராஜம்மாள் என்ற சித்தியும் உள்ளனர். இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராமகிருஷ்ணனுக்கும், முத்துவுக்கும் கோர்ட்டில் சொத்து தகராறு காரணமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை ராமகிருஷ்ணன் வீட்டுக்கு முத்துவின் […]
