அரியலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, தனியார் உரக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் […]
