இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டுடன் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், பெட்ரோல் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை வரலாற்றிலேயே கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது மக்களுக்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது […]
