குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகின்றது. ஆனால் இந்த திட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. […]
