ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 60 வார்டுகளிலும் காலை மாலை நேரங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சத எந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மூலமாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் பேசும்போது ஈரோடு மாநகராட்சி டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை […]
