விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களோடு இணைப்பொருட்களையும் கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே மேகநாதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகியவை தனியார் மட்டும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் இயந்திரங்கள் […]
