விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர்த்து வேறு உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்களை தமிழகத்திலுள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக கூட்டுறவுத்துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெறும் விவசாயக் கடன்களில் உரப் பகுதியாகவோ (அல்லது) ரொக்கத்திற்கோ உரங்களைப் பெற்று வருகின்றனர். நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் […]
