குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு […]
