கந்துவட்டி கொடுமை கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கி குழந்தைகள் அனாதைகளாகிய சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் கைலாசம்பாளையத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் இவர்களுக்கு பூஜாஸ்ரீ மற்றும் நவீன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழிலுக்காக சிலரிடம் சுப்பிரமணியம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால் வட்டி எகிறி கொண்டு செல்லவே பணத்தை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு […]
