அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலவரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 18 வயது இளைஞன் 4 ஆம் வகுப்பில் இருந்த பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் ஒரே வகுப்பில் இருந்த 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சல்வரடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். […]
