ஆட்டோ மோதி உயிரிழந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள விக்ரோலி கிழக்கு என்ற பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் சேத்தன் அசிர்நகர் (26) என்பவர் சென்றார். அந்த ஆட்டோவை கம்லேஷ் மிஸ்ரா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீடு வந்ததும் சேத்தன் அசிர்நகர் ஆட்டோ ஓட்டுனரிடம் 200 ரூபாயை கொடுத்துள்ளார். இதில் ஆட்டோ கட்டணம் 172 ரூபாய் போக மீதம் 28 ரூபாயை ஆட்டோ ஓட்டுனர் […]
