வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த தம்பதியை கிராம மக்களே உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவிலுள்ள நிமபல்லி சுரஷாய் என்ற கிராமத்தை சேர்ந்த சரல் பலிமுச்சா மற்றும் சம்பாரி என்ற தம்பதியினர் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்த கிராமத்தினர் வீட்டில் இருந்த இருவரையும் தீ வைத்து கொளுத்தினர். அதில் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார்கள். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
