ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியே சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு பரத் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் வண்டிமேடு ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை பரத் கடந்து சென்றுள்ளார். அப்போது விழுப்புரத்தில் […]
