தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும், தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த […]
