அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 911 உயிர்களை பறித்து சென்றுவிட்டது. பிரேசிலில் மட்டும் 2 லட்சத்து 93 ஆயிரத்து 357 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் 19,000 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு தினமும் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருபவர்களை அடக்கம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் சவக்குழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேலை பளுவால் அழுத்தத்தில் இருக்கும் […]
