ஆஸ்திரியாவில் ஒரு நபர், உயிரிழந்த தன் தாயின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஓராண்டிற்கும் மேலாக உடலை பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த 89 வயது பெண், கடந்த 2020- ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இயற்கையாக உயிரிழந்திருக்கிறார். அவரின் 66 வயதுடைய மகன், தாயின் உடலை, துர்நாற்றம் வீசாமல் இருக்க குளிர்பதன பைகள் வைத்து, கடந்த ஓராண்டாக வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் அறைக்குள் வைத்திருந்துள்ளார். தற்போது வரை, 50,000 யூரோக்கள், தாயின் ஓய்வூதியத்தின் மூலம் […]
