விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, […]
