ஈரோடு மாவட்டத்திலுள்ள குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்டுவதற்கு தடை கோரிய மனுவுக்குப் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நபாா்டு வங்கியின் கடன் உதவியுடன் தமிழகம் முழுதும் பல மாவட்டங்களில் ரூபாய் 38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு கொடுமுடிதாலுகா கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையிலும் தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவற்றிற்கு தடைகேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தங்கவேலு என்பவா் […]
