உலகின் பயங்கர வெடி மருந்துகள் பிரித்தானியாவில் பரிந்துரைக்கப்படும் உயர் இரத்த அழுத்த மருந்துகளில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சுகாதாரத்துறையினர் உயர் ரத்த அழுத்தத்திற்காக பயன்படுத்தும் மாத்திரைகளில் பயங்கர வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை திரும்ப பெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் அந்த மாத்திரைகளில் கலந்திருப்பதால் அவற்றின் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவில் வாழும் பல மில்லியன் மக்கள் இந்த மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக சந்தைகளில் […]
