தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவி, திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி […]
