கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வங்காள தேசத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8400 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,348 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 407 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,45,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் கொரனாவினால் இன்று உயிரிழந்தனர். […]
