கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்று தனியார் […]
