தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனு விவரம்: மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் […]
