பத்தாம் வகுப்பு படித்து விட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பார்களா என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டம் துவரிமான்னை சேர்ந்த மதுரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு […]
