நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசுகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் குறைந்த விலையில் உயர்தர வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செரிவூட்டிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த வெண்டிலேட்டர்கள் எளிதாகக் கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
