வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% உள் ஒதுக்கீட்டில் 10.5% உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அன்று தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக அரசு பதவிக்கு வந்த பின்னர் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவசரம் கருதி மதுரை கிளைக்கு […]
