கர்நாடக மாநில உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி (61) மாரடைப்பால் மரணமடைந்தார். பெங்களூருவில் உள்ள டாலர்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமேஷ் கட்டிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில், வீட்டில் உள்ள கழிவறையில் உமேஷ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். உமேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
