ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் இரு அனல் மின் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இருந்தது. இதை எதிர்த்து அப்பகுதி […]
