வடகொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கையில் எடுத்துள்ளனர். வட கொரியா நாட்டில் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நிலையில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பிளிக்கின்றனர். இவர்கள் வீட்டிலேயே மூலிகை தேநீர் தயாரித்து அருந்துவது போன்ற பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இதனையடுத்து வட கொரியாவில் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறியுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
