உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று டாடா சுமோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமோலி காவல் கண்காணிப்பாளர் கூறியது, ஜோஷிமத் பகுதியில் இருந்து பல்லா ஜாகோல் சிற்றூருக்கு டாடா சுமோ வாகனத்தில் 17 பேர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் உர்கம் பகுதியில் 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 3 […]
