மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை, படிப்படியாக வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒருநாள் தொற்றின் பாதிப்பு , 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு நேற்று 202 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் , அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் […]
