Categories
தேசிய செய்திகள்

வணிக வளாகங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு என கணக்கிட்டு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை, 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை என வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டட விதிகளின்படி போதிய […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை தடை…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் காலியிடங்களை நிரப்புவது எப்போது?….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

இந்தியா முழுவதும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, நீதிபதி கேசவேலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2019ஆம் ஆண்டு வரை காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து 2020 […]

Categories
மாநில செய்திகள்

3 அமைச்சர்களின் துறை மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் துறைகள் மாற்றியமைத்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தொழில்துறை அமைச்சரிடமிருந்த ‘சர்க்கரை ஆலைகள்’ வேளாண் துறை அமைச்சருக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இருந்த ‘விமான போக்குவரத்து’ தொழில் துறை அமைச்சருக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடமிருந்த ‘அயலக பணியாளர் கழகம்’ தொழில் துறை அமைச்சருக்கும் மாற்றப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சாமிவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாமுவேலுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து கொண்ட சாமிவேலு க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று உறுதி செய்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மாமியார்களே உஷார்…. இனி இத பண்ணா அவ்வளவுதான்…. உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…..!!!!

மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான தண்டனையாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை திருவொற்றியூரில் மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாதுகாக்காத போது அந்தப் பெண் பாதிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள்,மாமியார் தனது மருமகளுக்கு கொடுமை செய்தால் அது கடுமையான குற்றமாக கருதப்படும் என்று கூறியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சேவல் சண்டை நடத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போலவே தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு பட்டியலில் கிடா முட்டு மற்றும் சேவல் சண்டை ஆகியவை இடம் பெறுகின்றன. தற்போது வரை கிராமங்களில் சேவல் சண்டையை பார்த்து ரசிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் காலம் காலமாக சேவல் சண்டை நடந்து வருகிறது. இந்த ஆண்டு சேவல் சண்டை நடப்பதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து இந்த ஊரை சேர்ந்த தங்கமுத்து என்பவர் அனுமதி வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தனியார் அலுவலகங்களை உடனடியாக மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி கொரோனா தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரேன் எனப்படும் மாறுபட்ட கொரோனா இரண்டும் சேர்ந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி 22 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ஆதார் எண்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தர்பார் மகிளா ஒருங்கிணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் விரைந்து வழங்கி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தாமதமாகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் விவசாய கடனில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. இந்நிலையில் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்க கூடாது. மேலும் அவர்களுக்கு மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடங்கள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு…. வலுக்கும் கோரிக்கை….!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடம் தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு தகுந்தார் போல அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11 சதவீதமாக உயர்த்தப்பட்டு மொத்தம் 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 31ஆம் தேதி வரை…. அலுவலகம் வர தேவையில்லை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அரசு பணிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள்,மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளித்து  மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை குடிசை வாழ் மக்களின் நிலைமை….. கவலை தெரிவித்த மனித உரிமை ஆணையம்….!!!!

மும்பை குடிசை வாழ் மக்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மும்பையில் உள்ள குடிசை வாசிகள் தங்களுடைய வாழ்க்கை நிலை குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸ்-க்கு மராட்டிய அரசு தலைமைச் செயலாளர் மூலம் பதில் அளித்தது. அதில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு வீடு வழங்க மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இனி மோடி படத்தை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் பதிக்கப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் செய்தி…. சிஇஓக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கைது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கட்டாய மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாய்ந்தது. அதனால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசுப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பாடத்திட்டம் மாற்றம்…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தேசிய மற்றும் உலகளாவிய தரவரிசையில் தமிழக பல்கலைக்கழகங்களை இடம்பெற செய்யும் வகையிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்த கூடிய வகையிலும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தை மாற்றிய பிறகு தமிழ், இலக்கியம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளியை பாதுகாக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்னென்ன […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. காகிதமில்லா செமஸ்டர் தேர்வு…. உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்  மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: இவர்களுக்கு மட்டுமே அனுமதி…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையினருக்கான  வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ஊரடங்கு அமலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து தட்டச்சு பயிற்சி நிலையங்களும்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தட்டச்சு பயிற்சி நிலையங்களை மூட தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தட்டச்சு பாட தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ், பயிற்சி வகுப்புகள் அரசு உத்தரவுப்படி, 25 நாட்களில் முடித்து வைக்கப்படும். தேர்வு கால […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் காவல் துறைக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தபோது, குற்றம் நடைபெறுவதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது என்பது ஆபத்தானது ஆகும். குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாக பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை மக்களும் பார்ப்பார்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும். விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து திருத்திக் கொள்ள வேண்டும். அரசு […]

Categories
மாநில செய்திகள்

சிசிடிவி….. தனிநபர் சுதந்திரம் பாதிக்கக்கூடாது….. உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு….!!!!

ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியாக செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று விழுப்புரம் ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டுமென்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அவிநாசியில் மசூதி கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திருப்பூர் அவினாசியில் உள்ள மசூதியில் விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதாக கூறி, வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர் தொடர்ந்த மனு மீது எடுத்த நடவடிக்கை பற்றி ஜனவரி 31ஆம் தேதி வரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மசூதியின் விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை குறித்த பத்திரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத மனைகள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக 2016-ல் புகார் பெறப்பட்டது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்த பத்திரங்களை பதிவுசெய்ய 2017-ல் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி ஏராளமானோர் சார்-பதிவாளர் அலுவலகங்களில், மனைகள் பதிவு செய்யப்பட்டதாக நகரமைப்பு துறை புகார் தெரிவித்தது. இது தொடர்பாக சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டதில் நீதிமன்ற உத்தரவையும்  மீறி 160 சார்-பதிவாளர்கள் அங்கீகாரமில்லாத […]

Categories
தேசிய செய்திகள்

இனி சம்பளம் கிடையாது, கட்டாய விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு செயலர், துறைத் தலைவர்கள் தங்களின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களில் தகுதியான அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். தங்களின் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதிப்படுத்தி வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேசன் கடைகளில்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். அதேசமயம் ரேஷன் கடைகளுக்கு மக்கள் கூட்டமாக வருவதை தடுக்க எந்த நேரத்தில் எந்த தேதியில் வரவேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொங்கல் தொகுப்பின் தரம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: தமிழகம் முழுவதும் இனி அபராதம்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முகக்கவசம் போடாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ்…. சற்றுமுன் அதிரடி….!!!!

பாஸ்கான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சாட்டை துரைமுருகன், கடந்த மாதம் யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார். அந்த வீடியோ ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததற்கு காரணம். பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என்று கூறி காவல்துறையினர் அவரை கைது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில்…. யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கல்லூரிகளில் ராக்கிங் செய்யும் மன நிலையில் சில மாணவர்கள் இருக்கின்றனர். அவ்வாறு ராக்கிங் செய்யும் மனநிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ராக்கிங் சம்பவங்கள் மற்றும் அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர் சேர்க்கை கையேடுகளில் தவறாமல் குறிப்பிட வேண்டும். ராகிங் தடுப்பு குழு, தடுப்பு படை ஆகியவற்றை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அதிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் சரவணன்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

நடிகர் அபி சரவணன் நடிகை அதிதி மேனன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று கூறி பிரிந்தனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் சட்டப்படி செல்லும் என்று அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே தனது காதல் உண்மை என்றும் அதைப் புரிந்து கொண்டு அதிதி திரும்பி வந்ததால் மகிழ்ச்சி என்று அபி சரவணன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தடை இல்லைன்னா ரோட்ட போடுங்க பா…. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை இல்லை என்றால் சாலை பணிகளை உடனே முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கந்தன் வாயில், ஜமீன் கொரட்டூர், தண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் லெவல் கிராசிங்கை கடந்து, சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய சூழல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு…. 144 தடை…. அரசு பரபரப்பு உத்தரவு….!!!

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா திடீரென்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தேவைப்பட்டால் பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க மாநில அரசுகள் 144 தடை, இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. PT-PCR பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் மீது செலுத்திய ஆர்வத்தினாலும் , படிப்படியாக தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில், தமிழகத்திலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட உள்ள மளிகை பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் உணவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் உட்பட 21 விதமான பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்த பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நிவாரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மினி விளையாட்டு அரங்கம்…. அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் ஆணையிட்டுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, உறுப்பினர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது, மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் விளையாட்டு வீரர், […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நிலங்களை மீட்க…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 2 குழுக்களை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தார். இந்தநிலையில் கோவில் நிலத்தை கண்டறிந்து மீட்க அரசின் உள்துறை வருவாய்த்துறையின் ஒருங்கிணைப்பு அவசியம். மேலும் 3 துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

24 வீடுகளை காலி செய்ய உத்தரவு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான […]

Categories
மாநில செய்திகள்

டோல்கேட்டுக்கு எதிர்ப்பு…. அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜன் குட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 4.3 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள பெரிய பனமுட்லு அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திண்டிவனம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் 11 ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

2 வருடங்களுக்கு தொலைபேசி அழைப்பு விவரங்கள்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்கள் போன்றவற்றை 2 வருடங்களுக்கு ஆவணம் செய்து வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வர்த்தக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல்கள், ஐ.பி. தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2 வருடங்களுக்குப் பின் ஆவணப்படுத்தும் காலத்தை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு பிறப்பிக்கப்படாவிட்டாலும் நிறுவனங்கள் அந்த தகவல்களை அழித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2-வது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு இன்று 125-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் வைரஸும் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக ஒமைக்ரான் பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சி கடைக்காரர்கள் கவனத்துக்கு….  அதிரடி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில்  ஆடு, கோழி வெட்ட படுவதாக அந்த கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும் விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த எஸ் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்…. குஷியோ குஷியில் செவிலியர்கள்….!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த தகவலால் ஒட்டுமொத்த செவிலியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகரில் மத்திய அரசு 60 சதவீதம் பங்களிப்பு, மாநில அரசு 40% பங்களிப்புடன் 390 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதியான ஒருவரை தேர்ந்து எடுக்கும் பணியை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்துவருகின்றது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6177 அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 950 க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பதவிக்கான இடங்கள் காலியாக உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆ. நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 20 யூடியூப் சேனல்கள்…. 2 இணையதளங்களை முடக்க…. மத்திய அரசு உத்தரவு….!!!

20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவை பொருத்தவரை பல யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சில இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதுபோன்ற யூடியூப் மற்றும் இணையதளங்களை முடக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

OMICRAN: தமிழகத்தில் தீவிரம்…. அரசு பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கட்டமைப்புகளை தயாராக வையுங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த வேறு சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மருத்துவ கட்டுப்பாடுகளை தயார் […]

Categories

Tech |