உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு, அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் வரும் 2023 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். அவ்வாறு முடிக்கப்பட்ட பின்னர் அதுவே இந்தியாவின் தேசிய கோயிலாக அறிவிக்கப்படும் என அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவுக்கு தேசியக்கொடி, தேசிய விலங்கு, தேசியப் பறவை […]
