உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று யோகி ஆதித்யநாத் வாரணாசி வந்திருந்தார். இந்த நிலையில் வாரணாசியில் இருந்து லக்னோ செல்வதற்காக புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரின் மீது பறவை ஒன்று மோதியது. இதனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
