உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதாவில் உள்ள பைலா கிராமத்திலிருந்து சிறியரக பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. தியுதி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 4 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த உள்ளூர் […]
