தேனி மாவட்டத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு வந்த விவசாயியின் பணத்தை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள மஞ்சளாறு பகுதியில் முருகேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்காக தேவதானப்பட்டியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து 14,000 ரூபாயை எடுத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் 10,000 […]
