அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நபர்களிடம் அரசு வேலை வாங்கித் […]
