விளையாட்டு வீரர்கள் இணையவழியில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]
