நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயா. பாக்கியராஜ் மற்றும் உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தன்நிலை விளக்க கடிதம் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியது […]
