திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா… கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல, இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி, இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]
