தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி, தன் தந்தை ஸ்டாலினிற்கு AIIMS என்று குறிப்பிடப்பட்ட ஒரு செங்கலை வழங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பிற்பகல் 3:50 மணியளவில் திமுக கூட்டணி சுமார் 149 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதில் விளாத்திகுளம், சேப்பாக்கம், கிள்ளியூர் மற்றும் வந்தவாசி போன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. […]
