திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் நாள்தோறும் 300 ரூபாய் […]
