பட்டபகலில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள ஆயிரவேலி கிராமத்தில் பூங்கோதை (65) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பூங்கோதை தன் 2-வது மகன் ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். ஈஸ்வரன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]
