அரியலூரில் ஆபத்து காத்து விநாயகர் கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஆபத்து காத்த விநாயகர் திருக்கோவில் இந்த கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கைப் பொருட்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சுமார் 5000-ற்கும் மேற்பட்ட பணத்தை திருடி சென்றிருப்பது […]
