ராமநாதபுரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் தூய்மை பணியாளர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் ஏழை பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம் முகைதீன், பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், ஊராட்சி தலைவர் மணிமேகலை, […]
