உக்ரைன் ரஷ்யா போரானது நாற்பத்தி எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரின் காரணமாக உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உக்ரேன் விவகாரம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். […]
