சேவூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் அருகே இருக்கும் மாங்கரசுவலையப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் கம்பு, ராகி, திணை, வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுதானியங்கள் பருப்பு வகைகள், கீரை விதைகள், அரிசி ரகங்கள், எண்ணை வித்துக்கள் […]
