திருமணம் போன்ற விழாக்களில் சமையல் பணி (கேட்டரிங்) மேற்கொள்ளும் சமையலா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ச. மாரியப்பன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா், உணவகம் – திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை தேவைப்படுவோருக்கு, தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பான வசதிகளுடன் கொண்டு செல்ல வேண்டும். உணவுகளை பாதுகாப்பாக வைத்து, சமையல் செய்ய வேண்டும். மீதமாகும் உபரி உணவை தேவையானவா்களுக்கு வழங்க ஏதுவாக, தொண்டு நிறுவனங்களின் விவரங்களை […]
